×

காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுக்காததால் விரக்தி ஜெகன்மோகன் தங்கை சர்மிளா தனித்து களம் காண திட்டம்: தெலங்கானாவில் 5 முனை போட்டி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை சர்மிளா. இவர் தனது தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியை போன்று அரசியலில் பெயர் எடுக்கவேண்டும் என விரும்பினார். இதற்காக ஆந்திராவில் தனது அண்ணன் நடத்திவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்று தெலங்கானாவில் கால் பதிக்க விரும்பி கடந்த 2021ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெலங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். தெலங்கானாவில் தற்போதைய ஆளும் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கு மாற்றாக சர்மிளா தன்னை பிரகடனப்படுத்தி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபயணம் உள்ளிட்டவை மேற்கொண்டார். இதனிடையே சர்மிளா கட்சியை ஒட்டு மொத்தமாக காங்கிரசில் இணைக்க தீவிரம் காட்டி வந்தார். 2 முறை டெல்லிக்கு சென்ற சர்மிளா, அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாத்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சில நிபந்தனைகளை சர்மிளா முன்வைத்தார்.

ஆனாலும் சர்மிளாவை காங்கிரசில் இணைக்காமல் கட்சியின் மேலிடம் தொடர்ந்து மவுனம் காட்டி வருகிறது. இதனால்விரக்தியடைந்த சர்மிளா தனித்து போட்டியிட திட்டமிட் டுள்ளார். இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சி, ஓவைசி தலைமையிலான எம்ஐஎம் கட்சி, பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இந்நிலையில் 5வதாக தற்போது சர்மிளாவின் கட்சியும் தேர்தல் களம் காண உள்ளது.

The post காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுக்காததால் விரக்தி ஜெகன்மோகன் தங்கை சர்மிளா தனித்து களம் காண திட்டம்: தெலங்கானாவில் 5 முனை போட்டி appeared first on Dinakaran.

Tags : Jaganmohan ,Sharmila ,Congress ,Telangana ,Tirumala ,Chief Minister ,Chief Minister YS ,Rajasekhara Reddy ,
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...